ஓவர்நைட்ல 'மில்லினியர்' ஆன பெண்...! அவங்க பண்ணினது 'வெரி சிம்பிள்' விஷயம்...! - அதிர்ஷ்டம் 'இப்படி' கூடவா ஒருத்தர 'கோடீஸ்வரர்' ஆக்கும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் திடீரென கோடிஸ்வரியாகியுள்ள சம்பவம் அனைவரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வந்தது எனலாம். கொரோனா வைரஸ் முதலில் உலகில் பரவிய நேரத்தில் அதன் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டறிய பல முயற்சிகளை எடுத்தது.
அதோடு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. பல நாடுகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகளையும், பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான், ஆஸ்திரேலிய நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்களுக்கு, 'தி மில்லியன் டாலர் வேக்ஸ் அலையன்ஸ்' என்ற பெயரில் ஒரு லாட்டரி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில் வெற்றி பெறும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைக்கும்.
அதன்படி, இந்த லாட்டரி போட்டியில் பங்குகொண்ட 25 வயதான ஜோயன் ஸூ என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
