விறுவிறுப்பாக நடந்த கபடி போட்டி.. "பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த ஒரு கணம்.." இளம் வீரருக்கு நேர்ந்த 'துயரம்'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கபடி போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது, இளம் வீரருக்கு நடைபெற்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
தமிழகத்தில், பல இடங்களில், கிரிக்கெட், கால்பந்து, கபடி உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள், திருவிழா நேரத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு சமயத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், பண்ருட்டி வட்டம் மானடிகுப்பம் என்னும் கிராமத்தில், கபடி போட்டிகள் சமீபத்தில் நடைபெற்று வந்துள்ளது.
இந்த போட்டிகளில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கபடி அணியினர் போட்டிகளில் களமிறங்குவது வழக்கம். அதே போல, போட்டியைக் கண்டு களிக்கவும் கிராம மக்கள் அங்கே சூழ்ந்து கொள்வார்கள். இந்நிலையில், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற கபடி வீரரும் புறங்கணி கிராமத்தில் இருந்து ஆடிய அணி ஒன்றில் களமிறங்கி இருந்தார்.
அப்போது, மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போட்டிக்கு மத்தியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று, அங்கிருந்தவர்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது. விமல்ராஜ் எதிரணியினரை பிடிக்க முயன்று சென்ற போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில், எதிரணி வீரர் விமல்ராஜை பிடிக்க முயன்ற போது, அவரின் மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் இருந்துள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போக, உடனடியாக விமல் ராஜை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கபடி வீரர் ஒருவர், போட்டிக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக அடிபட்டு உயிரிழந்த சம்பவம், அந்த கிராமத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல, அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக வீடியோவை எடுத்திருந்ததால், விமல் ராஜின் கடைசி நிமிடம் தொடர்பான கபடி வீடியோக்களும், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பார்ப்போர் பலரையும் கண் கலங்க செய்து வருகிறது.
Also Read | "குரங்கு அம்மை நோய்க்கு இந்த மருந்தை Use பண்ணலாமா?".. ஐரோப்பிய யூனியன் சொன்னது என்ன?.. முழு விபரம்..!