The Legend
Maha others

ஏலத்துக்கு வந்த முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட்.. சூடுபிடிச்ச ஏலம்.. யம்மாடி இவ்வளவு கோடியா.. அப்படி என்ன இருக்கு அதுல.?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jul 26, 2022 11:25 AM

உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட் ஒன்று கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. இது அவரது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.

Muhammad Ali championship belt sold in an auction

Also Read | "பண பிரச்சனை தீரணும்னா பரிகாரம் பண்ணனும்".. மனைவியின் பேச்சை நம்பி ஆற்றங்கரைக்கு சென்ற கணவர்.. அடுத்த நிமிஷமே நடந்த பயங்கரம்..!

1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தவர் முகமது அலி. காசியஸ் மார்செலஸ் கிளே என்பதுதான் முகமது அலியின் இயற்பெயர். சிறுவயதில் முகமது அலிக்கு இருந்த ஆக்ரோஷத்தை கண்ட ஜோ மார்ட்டின் என்னும் காவல்துறை அதிகாரி அவரை குத்துச் சண்டையில் ஈடுபட காரணமாக இருந்திருக்கிறார். மேலும், முகமது அலியின் பயிற்சியாளராகவும் ஜோ செயல்பட்டார். ஆனால் முகமது அலியின் கரங்கள் இந்த உலகை வெல்ல இருக்கும் செய்தி ஜோ மார்டினுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. முகமது அலி களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகளை பெற்றவர். அதில் 37 நாக்-அவுட் மூலம் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Muhammad Ali championship belt sold in an auction

வெற்றி

குத்துச் சண்டையில் வெற்றியை மட்டுமே அதிகம் சந்தித்தவரான அலி, கடந்த 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற ரம்பிள் இன் தி ஜங்கிள் (Rumble in the Jungle) என்ற போட்டியில் புகழ்பெற்ற ஜார்ஜ் ஃபோர்மேனை எதிர்த்து களமிறங்கினார். பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் ஜார்ஜ் ஃபோர்மேனை நாக்-அவுட் செய்து பட்டத்தை வென்றார் அலி. இது அவருடைய வெற்றி சரித்திரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் வென்றபோது அலி பெற்ற சாம்பியன்ஷிப் பெல்ட் சமீபத்தில் ஏலத்திற்கு வந்திருக்கிறது. இதனை வாங்க பல பிரமுகர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள்.

ஏலம்

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் NFL அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் இர்சே இந்த பெல்ட்டை 6.18 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்) வாங்கியுள்ளார். விளையாட்டு நினைவுச் சின்னங்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவரான இர்சே தனது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு துறையில் என்றென்றும் மறக்கமுடியாத பொருட்களை பாதுகாத்து வருகிறார்.

Muhammad Ali championship belt sold in an auction

இந்நிலையில், முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது அவரது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.

"குரங்கு அம்மை நோய்க்கு இந்த மருந்தை Use பண்ணலாமா?".. ஐரோப்பிய யூனியன் சொன்னது என்ன?.. முழு விபரம்..!

Tags : #MUHAMMAD ALI #MUHAMMAD ALI CHAMPIONSHIP BELT #AUCTION #RUMBLE IN THE JUNGLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Muhammad Ali championship belt sold in an auction | Sports News.