"கல் வீசி தாக்க ஆரம்பிச்சுட்டாங்க!".. 'தகன மேடையில்' இருந்து 'கொரோனா' நோயாளியின் 'பாதி எரிந்த' உடலை 'தூக்கிக்கொண்டு' ஓடிய 'உறவினர்!'..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 03, 2020 12:53 PM

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

relations took and ran with corona patient half burnt body

அவருடைய சொந்த ஊருக்கு அவருடைய உடலைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அருகில் உள்ள இடத்தில் உடலை எரியூட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து அவரின் உறவினர்கள் முயற்சித்த போது அப்பகுதியில் இருந்து வந்தவர்கள் கும்பலாக சேர்ந்து உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த உறவினர்கள் பாதி எரிந்த நிலையில் உடலை எடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு இடத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு அவருடைய உடலை முழுமையாக எரியூட்டினர்.

இதுகுறித்து அந்த முதியோரின் மகன் பேசும்போது, “வருவாய் அதிகாரிகள் மற்றும் மெடிக்கல் குழுவினருடன் நாங்கள் தோமனா என்கிற இடத்தில் அமைந்துள்ள மைதானத்தில் எனது தந்தையின் உடலை எரிக்க முயன்றபோது உள்ளூர்வாசிகள் பிரேதத்தை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதிச் சடங்கின்போது நான் எனது சகோதரன் ஆகியோர் மட்டுமே இருந்தோம். அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி பாதி எரிந்த நிலையில் சடலத்தை தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டே இருந்தனர்.

பின்னர் எங்களுடைய சொந்த மாவட்டத்திற்கு உடலைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டது, இந்த விஷயத்தால் நீங்கள் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறி, அருகில் இருந்த இன்னொரு இடுகாட்டில் வைத்து உடலை எரிக்க, ஆம்புலன்ஸ் டிரைவரும் மருத்துவ ஊழியர்களும் பெரிய அளவில் உதவி செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய சிறந்த திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Relations took and ran with corona patient half burnt body | India News.