கையில பெரிய சைஸ் சங்கிலி...! என்னங்க இது கான்செப்ட்...? - ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 22, 2021 11:05 PM

அடிமையின் காதலை வெளிப்படுத்தும் விதமான ஐடியாவுடன் எடுத்த  திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pre wedding photoshoot with the theme of a past slave\'s love

திருமணம் நடப்பதற்கு முன்பாக போட்டோஷூட் செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. சாதாரண போட்டோஷூட் தாண்டி வித்தியாசமான ஐடியாக்களுடன் ப்ரீ - வெட்டிங் போட்டோஷூட் செய்வது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதில் சில கான்செப்ட்கள் பாராட்டுகளை பெற்றாலும், சில ஐடியாக்கள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இன்னும் ஒருபடி மேலாக குற்றசெயலாக அது மாறி வழக்கு பதிவும் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் எடுத்த திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

அது என்னவென்றால் கடந்த கால ஒரு அடிமையின் காதலை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட போட்டோஷூட். அதில், உடை மற்றும் தோற்றம் என அனைத்தையும் கடந்த காலத்தைப் போன்று உருவாக்கியுள்ளனர்.

இந்த ஜோடியில் ஆண் அந்த பெண்ணின் அடிமை போன்று வேடமிட்டுள்ளார். தோட்டத்தில் சந்தித்துக் கொள்வதைப்போல் செடிகளின் நடுவே இரண்டு பேரும் சந்தித்துக் கொள்கின்றனர். கையில் விலங்குடன் இருக்கும் அந்த ஆண் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போன்றும் எடுத்திருக்கின்றனர். காதலில் அந்த பெண்ணிற்கு அடிமையாக இருப்பது குறியீடாக உள்ளது.

இந்த ஒவ்வொரு புகைப்படங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடித்து நெட்டிசன்கள் இந்த ஜோடியை கலாய்த்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் அடிமைகளுக்கு நடந்த துன்பங்களை காட்சிப்படுத்தி அதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ஜோடி யார், எங்கு உள்ளவர்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pre wedding photoshoot with the theme of a past slave's love | India News.