PROMOTION வாங்குன அடுத்த நாள்... இதுவரை யாருமே சொல்லாத காரணத்தை சொல்லி ‘LEAVE’ கேட்ட ஊழியர்.. அதுக்கு ‘BOSS’ சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்இதுவரை யாரும் கேட்காத வித்தியாசமான காரணத்தை கூறி ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரை ஊழியர்கள் விடுப்பு எடுக்க பல்வேறு காரணங்களை கூறியுள்ளனர். ஆனால் பதவி உயர்வு பெற்ற ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரியிடம் விடுப்புக்காக கூறிய காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிறுவனம் ஒன்றில் கடுமையாக வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கி சம்பளமும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன அந்த ஊழியர், அன்று மது அருந்தி இதைக் கொண்டாடியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், அடுத்த நாள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் விடுப்பு கேட்க பொய் ஏதும் சொல்லாமல், தான் குடித்ததால் உடல் மந்தமாக இருப்பதாக உண்மையை கூறி மேலதிகாரியிடம் விடுப்புக் கேட்டு வாட்ஸ் அப்-ல் மேசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மேலதிகாரி, ‘நீங்கள் அதற்கு முழு தகுதியுடையவர். விடுப்புக்காக ஒரு சிறந்த காரணத்தை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்’ என பதிலளித்து விடுப்பும் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.

மற்ற செய்திகள்
