“ஊழியர்களுக்கு இதுதான் விருப்பம்னா.. கண்டிப்பா பண்ணுங்க!” - ‘உலக லெவல்’ சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்ற பணியாளர்கள் விரும்பினால் அனுமதி வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட இதுகுறித்த செய்தியில், “கொரோனா பரவல் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதை, ஒருவேளை நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்தால் அதற்கும் அனுமதி அளிக்க நிறுவனம் தயாராகவே உள்ளது. ஏனெனில் நிறுவனத்தை திறக்கும் முடிவு அடுத்த ஜனவரி வரை உறுதியாக இல்லை என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா உருவாக்கியுள்ள இந்த கஷ்டமான காலநேரத்துஇல், நம் பணிகளை நாம் புதிய வழியில் தொடர வேண்டியுள்ளதாக மைக்ரோசாஃப் ட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை, 78 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுமுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், கடந்த 10 மாதங்களாகவே உலக நாடுகளின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும், வழக்கமான வாழ்க்கையையும் பெருமளவில் பாதித்துள்ளது. இந்நிலையில்தான் கட்டுப்படுத்தப்பட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணியில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.