தாலிபான்கள் 'கண்ட்ரோல்'ல வர்றதுக்கு கொஞ்சம் முன்னாடி... 'ஜோ பைடன்'கிட்ட இருந்து வந்து போன்கால்...! 'மொத்தம் 14 நிமிஷம்...' என்ன பேசினார்...? - கசிந்துள்ள 'சீக்ரெட்' தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் மற்றும் ஆப்கான் அதிபர் பேசியுள்ள தகவல் தற்போது பொதுவெளியில் கசிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி ஆகிய இருவரும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பு கடைசியாக ஆலோசனையில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த உரையாடலில், ராணுவ உதவி, அரசியல் வியூகம், தகவல்களை எப்படி பகிர்ந்து கொள்வது குறித்த உத்திகள் விவாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி, இரு நாட்டு அதிபர்களும் சுமார் 14 நிமிடங்கள் பேசியுள்ளனர். அந்த உரையாடலில் ஜோ பைடன், 'உங்களிடம் சிறந்த ராணுவம் உள்ளது. அதோடு ஆப்கானில் நடக்கும் போரை நடத்த அவர்களுக்கு திறன் உள்ளது.
புதிய ராணுவ திட்டம் இருப்பதாக ஆப்கானின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கலாம். இது உங்கள் அரசை தக்கவைக்க மட்டும் அல்ல. மேலும் நீடித்திருக்க வைக்கும் வகையில் அரசியல், பொருளாதார, தூதரக ரீதியாக கடினமான போரை தொடர்ந்து நடத்த போகிறோம்' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
