VIDEO : 'சுஷாந்த் சிங்' வங்கி கணக்கு குறித்து கிடைத்த ’பரபரப்பு' தகவல்... நாலு மாசத்துல மட்டும் இத்தன கோடி 'ரூபா'வ அவரோட ’முன்னாள் காதலி’ செலவு பண்ணிருக்காங்க! - திடீரென ’வெடித்த’ அதிர்ச்சி தகவல்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் இறந்து சுமார் 45 நாட்களுக்கு பின்னர் வெளியாகி வரும் பல திடுக்கிடும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
![Sushantsingh bank statement access show huge transaction for Rhea Sushantsingh bank statement access show huge transaction for Rhea](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/sushantsingh-bank-statement-access-show-huge-transaction-for-rhea.jpg)
சுஷாந்த் சிங் ராஜ்புட் தந்தை கேகே சிங், பாட்னா போலீசாரிடம் தனது மகனின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உட்பட ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். தனது மகனின் வங்கி கணக்கில் இருந்த பணம் 15 கோடியை இவர்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டில் பயன்படுத்தியதாக புகாரளித்திருந்தார். அதே போல, தனது மகனின் மரணம், தற்கொலை இல்லை என்றும், திட்டம் போட்டு என் மகனுக்கு துரோகம் செய்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், சுஷாந்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது எதிர்ப்பு வலுக்கும் நிலையில், தற்போது வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுஷாந்த் சிங் வங்கி கணக்கு தொடர்பாக, ரீபப்ளிக் டிவி அதிரடி ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, கோடிக்கணக்கான ரூபாய் சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து தனது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ரியாவின் விமான டிக்கெட்டுகள், ஷாப்பிங், அவரது சகோதரர் ஷோவிக்கின் தனிப்பட்ட செலவுகள் உட்பட பல காரணங்களுக்கு சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்து தான் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 4 கோடியே 60 லட்சம் பணம் வரை சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன் ஒரு கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது. சுஷாந்த் சிங் வங்கி கணக்கு தொடர்பான தகவல் மேலும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)