யம்மாடி.. எவ்வளவு பெருசு... ஷூ-க்குள்ள இருந்ததை பார்த்து மிரண்டு போன நபர்.. IFS அதிகாரி பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஷூ-விற்குள் அடைபட்டுள்ள பாம்பை வனத்துறையை சேர்ந்த பெண் ஒருவர் வெளியே எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனச் சொல்வதுண்டு. பொதுவாகவே பாம்புகளை பார்த்தவுடன் பலருக்கும் அவர்களை அறியாமலேயே பயம் ஏற்பட்டுவிடும். இந்த அச்சமே பாம்புகள் பற்றிய செய்திகளை சுவாரஸ்யமாக்கிவிடுகின்றன. இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இதுபோன்ற வீடியோக்களை பலரும் விரும்பி பார்க்கின்றனர். சொல்லப்போனால் பலரும் இதுமாதிரியான வீடியோக்களை அதிகம் ஷேர் செய்கின்றனர். அந்த வகையில் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது.
ஷூ-க்குள் இருந்த அதிர்ச்சி
இந்த வீடியோவில் ஷெல்பில் அடுக்கப்பட்டுள்ள ஷூ-வை ஒரு வனத்துறையை சேர்ந்த பெண்மணி உலோக கம்பி கொண்டு ஆராய்கிறார். அப்போது கவனமாக ஷூவின் முன்பகுதியை அவர் பிடித்து தூக்க, திடீரென நாகப் பாம்பு ஒன்று படமெடுத்தபடி வெளியே வருகிறது. இதனைக் கண்ட அந்த பெண்மணி அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நிற்கிறார். இது காண்போர் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
கவனம் தேவை
இந்த வீடியோவை IFS அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"மழைக் காலங்களில் இதுபோன்ற இடங்களில் பாம்புகள் இருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலையில் பயிற்சி பெற்றவர்களின் உதவியை பெறுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
IFS அதிகாரியான சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் பலரும் தங்களது வாழ்வில் ஏற்பட்ட இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த பதிவில் ஒருவர்,"எனக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் எனது காரில் கருநாகம் ஒன்று இருப்பதை எதேச்சையாக பார்த்தேன். அதன் பிறகு அதனை வெளியேற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.
WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022