டயரை கொழுத்தி வெடித்த போராட்டம்!.. விரட்டி அடிக்கப்படும் ஆப்கான் அகதிகள்!.. மோப்ப நாய்களால் காப்பாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வரும் மக்களை உலக நாடுகள் புறக்கணிக்கத் தொடங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டவர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நெதர்லாந்து வந்தடைந்தனர்.
நெதர்லாந்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களுக்கான நான்கு அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் Harskamp-ல் உள்ள ராணுவ முகாமும் ஒன்று.
ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 800 பேர் Harskamp ராணுவ முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அகதிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Utrecht-க்கு கிழக்கே உள்ள கிராமமான Harskamp-ல் உள்ள இராணுவ முகாமில் வரவேற்பு மையத்திற்கு வெளியே சுமார் 250 போராட்டக்காரர்கள் திரண்டனர்.
இந்த போராட்டம் முதலில் அமைதியாக இருந்தது. ஆனால், கலைந்து செல்லுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புகளை இளைஞர்கள் பலர் புறக்கணித்ததால் பதற்றம் அதிகரித்தது.
மேலும், சில போராட்டகாரர்கள் தேசியவாத பாடல்களைப் பாடி, எதிர்ப்பு பதாகைகளைக் காட்டி வரவேற்பு மையத்தின் முன் டயர்களை கொளுத்தினர்.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு நாய்களுடன் விரைந்த போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தை கலைத்து போராட்டக்காரர்களை அப்பகுதியை விட்டு விரட்டி அனுப்பினர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
சொந்த நாட்டில் வாழ முடியாத சூழலால், வாழ்வாதாரம் தேடி அகதிகளாக வேறு நாட்டிற்குள் தஞ்சமடையும் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இத்தகைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
