‘சினிமா பாணியில் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்த காவல்துறை’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Selvakumar | Feb 22, 2019 03:42 PM

மெக்ஸிகோ நாட்டில் கடல் வழியாக போதைப் பொருள் கடத்திய கும்பலை அந்நாட்டு கடற்படையினர் அதிரடியாக கைது செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது.

Mexico navy seizes 630 kg of cocaine at sea, video goes viral

மெக்ஸிகோவில், சினலோவா என்னும் மாநிலத்தில் கடல்மார்க்கமாக 630 கிலோ மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள்களை கடத்திச் செல்வதாக அந்நாட்டு கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கடற்படையினர் வேகமாக ஹெலிகாப்டரில் கடத்தல்காரர்கள் சென்று கொண்டிருந்த கடல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

கடத்தல்காரர்கள் படகில் சென்று கொண்டிருந்ததை அறிந்த கடற்படையினர் ஹெலிகாப்டரில் அவர்களைத் துரத்தியுள்ளனர். ஆனால் கடத்தல்காரர்கள் சக்திவாய்ந்த மோட்டர்களைக் கொண்ட படகில் சென்றதால் அவர்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஆனாலும் விடாமல் துரத்தி ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடத்தல்காரர்களின் படகில் இறங்கி அவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சினிமா பாணியில் நடந்த, கடத்தல் காரர்களை பிடிக்கும் மெக்ஸிகோ கடற்படை வீரர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #MEXICO #NAVY #SMUGGLERS #VIRAL #SEIZED