35 வருஷம் 'கருவில்' இருந்ததால் கல்லான குழந்தை! அதிர்ச்சியில் மருத்துவர்கள்! பரபரப்பு புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அல்ஜீரியா: 73 வயது மூதாட்டி கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஜீரியாவின் ஸ்கிக்டா பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்டியின் வயிற்றை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரின் வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. பாட்டி இளம் பெண்ணாக இருந்த போது அவரின் வயிற்றில் குழந்தை உருவானது. அந்த குழந்தை தான் இப்போது கல்லாக மாறியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளானர்.
கல் குழந்தை:
கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் மூதாட்டி நடமாடி வந்துள்ளார். சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7-வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது.
இம்மாதிரியான கருவை மருத்துவ உலகில் லித்தோபிடியன் (lithopedion) எனக் கூறுகிறார்கள். இந்த கரு கருமுட்டையில் உருவாகாமல் அடி வயிற்றில் உருவானால் அதை லித்தோபிடியன் என அழைக்கப்படுமாம்.
இவ்வாறாக சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வறாக உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். அடி வயிற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும்.
வயிற்றில் வளர்ந்த கரு:
முதன்முதலாக 1582-ஆம் ஆண்டில் இதுபோல ஒரு பெண்ணின் வயிற்றில் கல் குழந்தை வளர்ந்துள்ளது. அந்த பெண் 82 வயதில் உயிரிழந்துள்ளார். உலகில் சுமார் 290 பேருக்கு தான் இப்படியாக லித்தோபிடியன் முறையில் கரு அவர்கள் வயிற்றில் வளர்த்துள்ளது.
இந்த மூதாட்டிக்கு வயிற்றுக்குள் சென்ற கரு அடி வயற்றிக்குள் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் வளர்ச்சியடைந்துள்ளது. பின்னர். சுமார் ஏழு மாதம் வளர்ந்த கரு பின்னர் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது.
கல்லாக மாறிய குழந்தை:
வயிற்றுக்குள் இருந்த குழந்தை 7 மாதத்திற்கு பிறகு வளர்ச்சியடையாததால் அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் இந்த குழந்தையை வெளியே தள்ள முயற்சித்திருக்கும். அது முடியாத பட்சத்தில் இந்த குழந்தையை கல்லாக மாற்றியுள்ளது. அனால் அவருக்கு உடல்ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.