போடு சக்க.. வாட்ஸாப்பில் இப்படி ஒரு புதிய வசதியா?.. யாருக்கெல்லாம் APPLICABLE?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பிரபல சமூக வலை தளமான வாட்ஸாப்பில் மிகப்பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாட்ஸாப்
உலகின் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலை தளங்களில் வாட்ஸாப்பும் ஒன்று. இதன் மூலமாக உரையாடல், புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு, லொக்கேஷன் மற்றும் டாக்குமெண்ட்களை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் வாட்ஸாப் வழியாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், மிகப்பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்ப புதிய அம்சத்தை மக்களுக்கு வாட்ஸாப் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபைல்கள்
வாட்ஸாப் செயலி மூலமாக குறிப்பிட்ட அளவிற்குள் (Size) இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்களை மட்டுமே பயனர்களால் அனுப்ப முடியும். இந்நிலையில், 2 ஜிபி வரையில் ஃபைல்களை அனுப்பும் புதிய அம்சத்தினை வாட்ஸாப் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் இதுகுறித்த ஆய்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
ஆய்வு
பயனாளர்களுக்கு 2ஜிபி அளவிலான ஃபைல்கள் அனுப்பும் வசதியை வாட்சாப் நிறுவனம் அர்ஜென்டினாவில் ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் விரைவில் ஐபோன் பயனாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிற சமூக வலை தளங்களில் அதிக அளவிலான ஃபைல்களை அனுப்பும் வசதியை கருத்தில் கொண்டு வாட்ஸாப் நிறுவனம் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே, வாட்ஸாப்பில் 100எம்பி வரையில் ஃபைல்களை அனுப்பும் வசதி நடைமுறையில் இருக்கிறது.
எதிர்பார்ப்பில் பயனாளர்கள்
தற்போது சோதனையில் இருக்கும் இந்த வசதி முதலில் ஐபோன் பயனாளர்களுக்கும் அதன்பின்னர் ஆன்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கும் அளிக்கப்படும் என தெரிகிறது.
உலகமே முழுவதிலும் சுமார் 200 கோடி மக்கள் வாட்ஸாப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், 2ஜிபி அளவிலான ஃபைல்கள் அனுப்பும் வசதியை வாட்ஸாப் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக வெளிவந்த தகவல் அம்மக்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.