'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'?...உடனே தட்டி தூக்கிருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Oct 16, 2019 05:44 PM
பயனாளர்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் 15 செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோர்ஸ் கண்டறிந்துள்ளது. அவை பயனாளர்களின் மொபைலில் இருந்தால் நீக்கிவிடுமாறு பிரிட்டன் சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆபத்துத் தரும் 15 செயலிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த புகார் ஒன்றையும் கூகுள் நிறுவனத்துக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. அதோடு பயனாளர்கள் அந்த செயலிகளை தங்கள் மொபைலில் வைத்திருத்தல் நீக்கிவிடுமாறு பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஆபத்தை விளைவிக்கும் இந்த செயலிகள், மக்கள் பெரும்பாலும் உபயோகிக்கும் போட்டோ எடிட்டிங் செயலிகளாக உள்ளன. ‘image editor’, ‘background cutout’, ‘autocut photo’ மற்றும் ‘autocut picture’ ஆகியன போட்டோ எடிட்டிங் சார்ந்த பெயர் கொண்ட செயலிகள். பயனாளர்கள் இதுபோன்ற பெயர்களை கண்டாலே அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த 15 செயலிகளும் 2019 ஜனவரி முதல் ஜூலை மாதத்துக்கு இடையிலான காலகட்டத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இணைந்துள்ளன. அதே போன்று மொபைல் ஸ்கேனிங் செய்ய உதவும் சில செயலிகளும் இந்த பட்டியலில் உள்ளன. எனவே பயனாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு வெளியிட்டுள்ள பட்டியலின் படி ''Image Magic, Generate Elves, Savexpense, QR Artifact, Find your Phone, Scavenger Speed, Auto Cut Out Pro, Read QR Code, Flash on Calls & Msg, Photo Background, ImageProcessing, Background Cut Out, Background Cut Out, Auto Cut Out மற்றும் Auto Cut Out 2019'' ஆகிய செயலிகள் பிரச்சனைக்குரிய செயலிகள் ஆகும்.