'அவரே சொல்லிட்டார்'.. 'கோல்டு லோன் குடுங்க'.. 'இன்னும் 20 பசு வெய்ட்டிங்ல இருக்கு.. அதிரவைத்த நபர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 07, 2019 03:37 PM

மேற்குவங்க பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் அண்மையில் பசுவின் பாலில் தங்கம் கலந்துள்ளதாக பேசியது சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, பசுவுடன் வங்கிக்கு வந்து தங்கக் கடன் கேட்டுள்ள நபரது செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

After Dilip Gosh Speech, man comes with cow to ask goldloan

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எதையும் பார்த்துதான் பேச வேண்டும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறது மற்றுமொரு சம்பவம்.

இந்திய பசுக்களின் பால் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதில் தங்கம் கலந்துள்ளதுதான் என்று மேற்குவங்க பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்திய பசுக்களின் ரத்த நாளங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் பாலில் தங்கத்தை உற்பத்தி செய்வதாகவும் திலீப் குறிப்பிட்டிருந்தார். இதை கேட்டுவிட்டு தன்குனி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பசுமாடுகளுடன் வங்கிக்கு வந்து,  ‘திலீப் கோஷ் கூறியபடி பசுமாட்டுப் பாலில் தங்கம் இருப்பதால் மாட்டினை வைத்துக்கொண்டு தங்கக் கடன் வழங்குங்கள்’ என கோரியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தன்னிடம் 20 மாடுகள் இருப்பதால் அத்தனைக்கும் தங்கக்கடன் கொடுத்தால், தான் பிழைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags : #GOLDLOAN #DILIP GHOSH