VIDEO 'மன்னார்குடி'யில் கேட்டாக.. சொல்லிடறோம்.. 'பூரிக்கட்டை'லாம் வேணாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 19, 2019 11:08 PM
டிக் டாக் வீடியோக்கள் காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சிலர் அதனை அளவோடு பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்பதற்கு கீழ்க்கண்ட வீடியோ ஒரு உதாரணம்.

'நாங்க சின்ன பசங்க' படத்தில் ரேவதி, முரளியை பார்த்து 'என்ன மானமுள்ள பொண்ணு' பாடலை பாடுவார். சுற்றி அனைவரும் அமைதியாக அமர்ந்து இருக்க, கம்பை எடுத்து காட்டுவார். உடனே அருகில் இருப்பவர்கள் எல்லாரும் அவருக்கு ஆதரவாக கோரஸ் பாடுவர்.
நல்லதொரு
குடும்பம்
பல்கலைக்கழகம்😑 pic.twitter.com/HXRYgM6OuE
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) November 18, 2019
அதே உத்தியைத்தான் இங்கே இந்த குடும்பத்தின் தலைவியும் பின்பற்றுகிறார். முதலில் அவர் பாடும் பாடலுக்கு அமைதியாக இருக்கும் குடும்பத்தினர், பூரிக்கட்டையை எடுத்து காண்பித்த பிறகு பயந்து கண்களை உருட்டி கோரஸ் படுகின்றனர். அதிரடி ட்விஸ்ட்டுகள் இல்லை என்றாலும் குட்டீஸ்களின் ரியாக்ஷன்கள் கவர்ந்து இழுக்கின்றன.
நீங்க என்ன நெனைக்கிறீங்க?
