புது ‘போன்’ வாங்க போறீங்களா?.. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘தள்ளுபடி’.. பிரபல நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் புதிய திட்டம் குறித்த அறிவிப்பை ஒன்பிளஸ் செல்போன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘Education Benefits’ பெயரில் அசத்தல் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகையில் ஒன்பிளஸ் சாதனங்களை வாங்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விசேஷ தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இந்தியா முழுக்க 760 பல்கலைக்கழகங்கள் மற்றும் 38,498 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்பிளஸ் Education Benefits திட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது ஒன்பிளஸ் டிவி வாங்கும் போது ரூ.1000 உடனடியாக தள்ளுபடி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் அக்சஸரி (Accessory) வாங்கும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இந்த சிறப்பு சலுகை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் பயன்பெற முதலில் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இந்த சலுகையை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
