“வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்!”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்வேலையும் செய்யவேண்டாம் ஆனால் ஊதியம் வீடுதேடி வரும் என்கிற புதிய திட்டம் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜெர்மனியின் My Basic Income என்கிற தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்த இந்த திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப் படுவோருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 1200 யூரோக்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு இலவசமாக ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்றாண்டு கால கட்டத்தின் போது இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகள் முழுவதற்கும் பதிலளிப்பது மட்டும்தான் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம். வாழ்வின் அன்றாட தேவைக்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அழுத்தம் இல்லாவிட்டால்தான், கிரியேட்டிவிட்டியுடனும், சுதந்திரமான மகிழ்ச்சியுடனும் மக்கள் இருப்பார்கள் என்பது இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பு.
இப்படி ஊதியம் பெறுபவர், துணிச்சலாக சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கவும், இன்னொரு பணியில் ஈடுபடவும் முடிவு செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பும் இந்தத் திட்டத்தின் நிறுவனங்களுக்கு உள்ளது. அதே சமயம் இந்த திட்டத்தால் நுகர்வோர் விலை எப்படி உயரும்? இத்திட்டத்திற்கு நிதி உதவி செய்வதற்காக எந்த அளவுக்கு வரி உயர்வு ஏற்படும்? என்கிற கேள்விகளும் தொடர்ச்சியாக எழுந்துள்ளன.

மற்ற செய்திகள்
