'ரைட்டு... இதுக்கு மேல FREE-அ கொடுத்துட்டு இருந்தா கட்டுபடி ஆகாது!'.. கட்டண வசூலை தொடங்கவிருக்கும் கூகுள்!.. அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்போட்டோக்களை கூகுளில் இனி இலவசமாக பேக்அப் செய்ய முடியாது. 2021, ஜுன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் போனிலோ அல்லது வேறு கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஹை குவாலிட்டி போட்டோ மற்றும் வீடியோக்களை கூகுள் போட்டோஸில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
இதுநாள் வரை இதற்கு குறிப்பிட்ட அளவு தான் சேமிக்க முடியும் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதோடு கட்டணமும் வசூலிக்கவில்லை.
தற்போது கூகுள் போட்டோஸில் 4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள் உள்ளனவாம். ஒரு வாரத்திற்கு 28 பில்லியன் போட்டோக்கள், வீடியோக்கள் வருகிறதாம்.
இந்நிலையில், இலவசமாக இந்த சேவை வழங்குவதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்த போட்டோக்களை சேமிக்கவே பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளதாம். ஆகவே, தேவையற்ற செலவுளை குறைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இப்போது கூகுள் போட்டோஸில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி 15ஜிபி வரை கூகுள் போட்டோஸில் போட்டோக்களை பேக் அப் வைத்துக் கொள்ள எந்த கட்டணமும் கிடையாது. 2021, ஜூன் 1க்கு முன்பு வரை போட்டோ, வீடியோக்களை சேமித்து வைத்து கொள்ளலாம்.
2021, ஜூன் 1க்கு பிறகு 15ஜிபிக்கு அதிகமாக போட்டோ, வீடியோக்களை இதில் பேக்-அப் வைக்க வேண்டும் என்றால் நம்முடைய தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த மாற்றம் இன்னும் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வராது.
ஜூன் 1, 2021 முதல் இந்த கட்டண முறை நடைமுறைக்கு வந்தால், உங்களின் ஸ்டோரேஜ் திறன் 15 ஜிபிக்கு அருகில் வந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் வரும். அப்போது தேவைக்கு ஏற்ப கட்டணம் செலுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
ஒருவருக்கு கூகுள் போட்டோஸில் 100ஜிபி ஸ்டோரேஜ் தேவை என்றால் மாதம் ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1300 செலுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப போட்டோக்களை பேக்அப் வைக்க கட்டணங்களை நிர்ணயித்துள்ளது கூகுள்.