இதென்னப்பா புது ட்விஸ்டா இருக்கு.. கோலி-ரோஹித் இடையே இப்படி ஒரு பிரச்சினை இருந்துச்சா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரிடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை என்ன என்பது பற்றி, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, கடந்த சில ஆண்டுகளில், அதிக வதந்திகளில் சிக்கிய விவகாரம் என்றால், கோலி மற்றும் ரோஹித் ஆகியோரை குறித்து தான்.
அணியிலுள்ள சீனியர் வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக, கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக முறை, சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வந்தது.
பெண்களை பகிரங்கமாக ஏலம் விட்ட புல்லிபாய் ஆப்.. ஆக்சனில் மத்திய அரசு.. பின்னணி
கோலி - ரோஹித் மோதல்?
கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும், இதில் சற்றும் உண்மையில்லை என பலமுறை தெளிவான விளக்கம் அளித்திருந்தனர். ஆனாலும், இது தொடர்பான தகவல்கள் குறைந்த பாடில்லை. இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக இருந்த கோலியை நீக்கி விட்டு, புதிய ஒரு நாள் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்திருந்தது.
கோலி அதிர்ச்சி
டி 20 கேப்டன் பதவியில் இருந்து கோலி தானாக விலகிய நிலையில், ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து தலைமை தாங்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், பிசிசிஐயின் இந்த முடிவால் கோலி அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்த தனது கருத்தையும் கோலி வெளிப்படுத்தியிருந்தார்.
மீண்டும் வெடித்த சர்ச்சை
இதன் காரணமாக, மீண்டும் கோலி - ரோஹித் இடையே சண்டை என தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தது. இருவரிடையே, மறைமுகமான மோதல் இருந்ததாகவும் பல்வேறு யூகங்கள் வெளியானது. இதனை மீண்டும் இருவரும் மறுத்தனர். மேலும், தாங்கள் சிறந்த முறையில் நட்புடன் இருப்பதாகவும் கூறினர்.
விளக்கம்
வெளியில் பல்வேறு யூகங்கள் கூறப்பட்டு வந்தாலும், போட்டியின் போது, மைதானத்தில் ஃபீல்டிங் செய்யும் இருவரும், மிகவும் ஜாலியாக தான் காணப்படுவார்கள். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளதா என்ற வதந்திக்கு, இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பதிலளித்துள்ளார்.
சிரிப்பு தான் வரும்
'ரோஹித் மற்றும் கோலி ஆகியோரிடையே எந்தவித பிரச்சனையும் இல்லை. அனைத்தும் சிறந்த முறையில் தான் சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான், யூகங்கள் பற்றி சிந்திக்க வேண்டாம் என நான் கூறுகிறேன். அவர்களிடையே ஒன்றுமில்லை. கோலி - ரோஹித் இடையே மோதல் உள்ளதாக வரும் செய்திகளை நான் படிக்கும் போது, எனக்கு சிரிப்பு தான் வரும்.
இந்திய அணியின் எதிர்காலம்
அவர்கள் இருவரிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்த சிறந்த பார்வையும், திட்டமிடலும் உள்ளது. என்னுடைய இடத்தில் இருந்து நீங்கள் பார்த்தால், அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, ஒரு குடும்பம் போல இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். மக்கள் இப்படிப்பட்ட விஷயங்களை உருவாக்குவது, வேதனையாக உள்ளது. இதனால், தயவு செய்து சர்ச்சைகளை 2021 ல் விட்டு விடுங்கள். இனிமேல், சிறந்த அணியை அவர்கள் எப்படி உருவாக்குவார்கள் என்பதைப் பற்றி நாம் பேசலாம்' என தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
கோலி - ரோஹித் ஆகியோரிடையே மோதல்கள் உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் பலமுறை இது தொடர்பாக விளக்கமளித்தனர். இருந்த போதும், தொடர்ந்து வதந்திகள் வெளியாகி கொண்டு தான் இருந்தது. தற்போது, தேர்வுக் குழுத் தலைவர் இதெல்லாம் வதந்தி தான் என கூறியுள்ள நிலையில், இனிமேலாவது கோலி - ரோஹித் இடையே மோதல் குறித்த வதந்தி தொடராது என எதிர்பார்க்கலாம்.