தாம்பரம் அருகே அதிர்ச்சி.. வாட்டர் வாஷ் செஞ்சிட்டு இருந்தவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாம்பரம் அருகே வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 43). சுதர்சன் நகரில் சொந்தமாக வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்துள்ளார்.
வாட்டர் சர்வீஸ் கடை
அப்போது வரதராஜன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வரதராஜனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கரெண்ட் ஷாக்
தகவல் அறிந்து வந்த போலீசார் வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
