அதிவேகமாக வந்த சிவப்பு கார்.. போலீசை பார்த்ததும் தப்பி ஓடிய நபர்கள்.. ‘உள்ள என்ன இருக்குன்னு பாருங்க’.. சென்னையில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வாகன சோதனையின் போது காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான போலீசார், நுங்கம்பாக்கம் மேயர் சிவசண்முகம் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றூ அதிவேகமாக வந்துள்ளது. உடனே போலீசார் காரை நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி கார் செல்ல முயன்றுள்ளது. சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த காரை சுற்றி வளைக்க விரைந்துள்ளனர்.
காரில் பயங்கர ஆயுதம்
ஆனால் அதற்குள் காரில் இருந்த நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடியுள்ளனர். அதில் கார் டிரைவர் மட்டும் போலீசார் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து காரை சோதனை செய்ததில், அதில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி
இதனைத் தொடர்ந்து பிடிப்பட்ட காரை டிரைவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டர். விசாரணையில், கார் டிரைவரின் பெயர் செல்வமணி என்பதும், இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர்கள், தென் மாவட்டங்களில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கணேசன், உதய பாண்டி, பரமசிவம் உட்பட 5 பேர் என தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
எதற்காக இவர்கள் ஆயுதங்களுடன் சென்னை வந்தனர்?, எதாவது குற்றச் செயலுக்காக, யாரேனும் அழைப்பில் பெயரில் வந்தார்களா? அல்லது தொழிலதிபர்களை யாரையாவது மிரட்டி பணம் பறிக்கும் நோக்குடன் வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
