சென்னை மெரினாவில் அதிர்ச்சி.. அசதியில் அயர்ந்து தூங்கிய தொழிலாளி.. தெரியாமல் பொக்லைன் வண்டியை எடுத்த டிரைவரால் விபரீதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மெரினாவில் பொக்லைன் இயந்திரம் ஏறியதில் தூங்கி கொண்டிருந்த குப்பை சேகரிக்கும் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் வழக்கமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளும் பணி நடப்பது வழக்கம். அதன்படி பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளும் பணி நடந்துள்ளது. இந்த பணியில் டிரைவர் வேல்முருகன் என்பவர் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது குப்பை சேகரிக்கும் தொழிலாளி ஏழுமலை என்பவர் அசதியில் முகத்துவாரத்தில் அயர்ந்து படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளார். இதனிடையே மண் அள்ளும் பணி முடிந்ததும் பொக்லைன் இயந்திரத்தை வேல்முருகன் பின்னால் இயக்கியுள்ளார். அப்போது கீழே படுத்துக்கிடந்த ஏழுமலையை வேல்முருகன் கவனிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அதனால் பொக்லைன் இயந்திரம் ஏழுமலையின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதனை அடுத்து ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய பொக்லைன் டிரைவர் வேல்முருகனையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மெரினாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
