போதை பொருள்-ன்னு இதையா.. வித்திட்டு இருக்காங்க?.. சென்னை போலீசிடம் வசமாக சிக்கிய 4 பேர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 4 பேர் கொண்ட கும்பல் ஹெராயின் என்னும் போதை பொருளை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டிருக்கிறது காவல்துறை. இதில் சிக்கிய நான்கு பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் இருந்த பொருளைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ரகசிய தகவல்
சென்னை மாதவரம் சாலையில், ஹெராயின் எனப்படும் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து போதை பொருள் விற்பனையாளர்களை பிடிக்க திட்டம் போட்டிருக்கிறது காவல்துறை.
இந்நிலையில் அதிரடி ஆப்பரேஷன் மூலமாக ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து ராஜா, அருண் குமார், தமீம் அன்சாரி, முகமது சபி ஆகிய நான்கு பேரை காவல்துறை கையும் பையுமாக பிடித்துள்ளனர்.
யூரியா
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கிலோ அளவிலான ஹெராயினை காவல்துறையினர் சோதனைக்கு அனுப்பினர். ஆனால், சோதனை முடிவில் பையில் இருந்தது யூரியா உரம் என்பது தெரியவந்து இருக்கிறது. இதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கத்தாரில் வசித்து வருபவர் சையது. இவரை தொடர்புகொண்ட இந்த நான்கு பேர்கொண்ட கும்பல், தங்களிடம் ஒரு கிலோ ஹெராயின் இருப்பதாக கூறியுள்ளனர். அதனை வாங்க விருப்பம் தெரிவித்த சையது, தனது உறவினர் ஒருவரை அனுப்புவதாகவும் அவரிடம் ஹெராயினை கொடுக்கும்படியும் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், ஹெராயினுக்கு பதிலாக யூரியாவை கொடுக்க இந்த கும்பல் திட்டமிட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடைபெறும் போதுதான் போலீசாரிடம் நான்கு பெரும் சிக்கி இருக்கிறார்கள். ஹெராயின் எனக் கூறி யூரியா உரத்தை விற்பனை செய்ய முயற்சித்த வழக்கில் நான்கு பேர் கைதாகி இருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
