உங்க பேக்ல என்ன இருக்கு...? 'பாத்ரூம்ல இருந்து வெளிய வந்தவர் கையில இருந்த பை...' 'உள்ள போய் பார்த்தா அங்கையும் ஒண்ணு இருக்கு...' - சென்னை ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துபாயில் இருந்து சென்னை வந்த எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமான ஊழியர் உதவியோடு தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது. எப்போதும் போல் பயணிகளை சோதனை செய்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்துள்ளனர்.
அப்போது, விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நிழல் ரவி என்பவர், முதல் தளத்தில் உள்ள ஏரோபிரிட்ஜ் அருகே உள்ள கழிவறையிலிருந்து ஒரு பையுடன் வெளியே வந்தார். இதைக்கண்ட பாதுகாப்பு அதிகாரி, சந்தேகமடைந்து நிழல் ரவியை நிறுத்தி பையில் என்ன இருக்கிறது, என்று விசாரித்துள்ளார். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் ரவி வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்தத்தில் சுமார் 3.2 கிலோ எடையுள்ள சுமார் ரூ.1.8 கோடி லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்பந்த ஊழியரை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தத்தின் பெயரில், நிழல் ரவியை கைது செய்தனர்.
மேலும் இதற்கு முன்பும் விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.3.6 கோடி மதிப்புடைய 5.1 கிலோ கடத்தல் தங்க கட்டிகளை வெளியே எடுத்து வந்து, கடத்தல் ஆசாமியிடம் கொடுத்த விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் உட்பட 5 பேரை கடந்த மாதம் சுங்கத்துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.