சேலம் அருகே பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு?.. பயந்து ஓடிய மக்கள்.. உண்மை என்ன..? அதிகாரிகள் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டை பகுதியில் இன்று காலை திடீரென பெரும் சத்தத்துடன் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடைகள், வீடுகளில் இருந்த கண்ணாடிகளில் இந்த அதிர்வு பிரதிபலித்துள்ளது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டதாக எண்ணி மக்கள் வீட்டை விட்டு வெளியே அச்சத்துடன் ஓடி வந்துள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக வானிலை அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலை அந்த வழியாக இரண்டு ஜெட் விமானங்கள் பெரும் சப்தத்துடன் பறந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்
