VIDEO: ‘GYM-ல கூட தளபதி பாட்டுதான்’!.. செம ‘ஜாலி’ மூடில் அஸ்வின்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இதற்கு அடுத்து நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இதனால் இரு அணி வீரர்களும் மும்பை சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் டெல்லி அணியின் சார்பாக விளையாடும் தமிழக வீரர் அஸ்வினும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Master certainly knows how to enjoy his gym sessions 😉
Disclaimer: We do not own copyright to the music.#YehHaiNayiDilli #IPL2021 #VaathiComing @ashwinravi99 @TajMahalMumbai pic.twitter.com/d9GbtfiFyU
— Delhi Capitals (@DelhiCapitals) April 6, 2021
இந்த நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அஸ்வின் நடனமாடினார். இந்த வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
