'தொடங்கிய ஆர்டிஓ விசாரணை'...'ஹேம்நாத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்'... 'இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் நுழைந்து படிப்படியாக உயர்ந்தவர் சித்ரா. இவருடைய நடிப்பும், அழகான தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் சின்னதிரையில் முன்னணி பிரபலமாக ஜொலித்த இவருக்குச் சமீபத்தில் ஹேமந்த் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் திருவான்மியூரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று வர முடியாத காரணத்தால் அங்கிருந்த தனியார் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சித்ரா குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற நிலையில் நீண்ட நேரமாக அவர் கதவைத் திறக்காமலிருந்துள்ளார். ஓட்டல் ஊழியரிடம் மாற்றுச் சாவி வாங்கி அறையைத் திறந்து பார்த்த போது சித்ரா தூக்கில் தொங்கி இறந்த நிலையிலிருந்ததாக ஹேமந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் தொடர் மன அழுத்தத்தில் சித்ரா இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஹேமந்த் ரவி தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகப் போலீசிடம் ஹேமந்த் தெரிவித்துள்ளார். இது சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹேமந்த் ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதாகக் கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த அக்டோபர் 19-ம் தேதி இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளிவந்துள்ள நிலையில், தற்போது சித்ராவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
