'குடும்பத்தையே சிதைத்த கொரோனா!'.. தாய் மகன்கள் உட்பட 3 பேர் பலி!.. இதயத்தை உறைய வைக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 1,045 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கெனவே, கொரோனாவால் விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த பெண்ணின் இரண்டு மகன்களும் ஏற்கெனவே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
