'நாளை' தோன்றும் 'சூரிய கிரகணத்தோடு...' 'கொரோனா' வைரஸ் 'செயலிழக்கும்...' 'எதிர்பார்ப்பை' ஏற்படுத்தும் 'ஆய்வாளரின் கூற்று...'
முகப்பு > செய்திகள் > உலகம்நாளை தோன்றும் சூரிய கிரகணம் கொரோனா வைரஸ் அழிவுக்கு காரணமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்த கிரகணம் 6 மணி நேரம் நிகழக் கூடியது என்றும் இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 21ஆம் தேதி தோன்றுவது அரிதான நீண்ட சூரிய கிரகணம். 6 மணி நேரம் நிகழும் இந்த சூரிய கிரகணத்தை நாட்டில் உள்ள மக்கள் காண முடியும். கிரகணத்தில் உச்சப் புள்ளியாக நெருப்பு வலையத்தைப் போல் சூரியன் தோன்றும் காட்சி அமையும்” எனக் கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில் இந்த சூரிய கிரகணம் தோன்றும் நாளே இந்த வருடத்தின் மிக நீண்ட நாள் என கணிக்கபப்ட்டுள்ளது. ராஜஸ்தானில் காலை 10: 12 மணி முதல் 11: 50 மணி வரை, மும்பையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1: 27 மணி வரை, பெங்களூரில் 10: 13 மணி முதல் பிற்பகல் 1: 31 மணி வரை, புது டெல்லியில் காலை 10: 20 மணி முதல், பிற்பகல் 1: 48 மணி வரை, சென்னையில் 10: 22 மணி முதல் பிற்பகல் 1: 41 மணி வரை, கொல்கத்தாவில் 10: 46 மணி முதல் பிற்பகல் 1: 48 மணி வரை பகுதி வாரியாக மக்கள் கிரகணத்தைக் காண முடியும். ஆண்டுக்கு இருமுறை நிகழும் சூரிய கிரகணத்தில் இது முதலாவதாகும்.
இதனிடையே, இந்த சூரிய கிரகணத்தோடு கொரோனா வைரஸ் செயலிழக்கும் எனச் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். சென்னையைச் சேர்ந்த அணு மற்றும் புவியியல் ஆய்வு விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படி கொரோனாவுக்கு சூரிய கிரகணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த டிசம்பரில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஜூன் 21 கிரகணத்தோடு செயலிழக்கும்” எனக் கூறியிருந்தார்.
இந்த செய்திகளுக்கிடையே சூரிய கிரகணத்தை மக்கள் யாரும் வெறும் கண்களில் பார்க்கக் கூடாது என்றும், முடிந்தளவு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாகக் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
