"சென்னைக்காரன ஊருக்குள்ள விடாதீங்க!".. ‘இதென்னடா சென்னைக்காரனுக்கு வந்த சோதனை!’.. பரவிவரும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று -ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் கொரோனா தொற்று ஐ கடந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் வேலை, வருமானம், நோய் அச்சம் உள்ளிட்ட பல விஷயங்களால் பலரும் இ-பாஸ்களை பெற்றுக் கொண்டும், இ-பாஸ் இன்றியும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், “ஊர் மக்களுக்கு ஓர் செய்தி.. சென்னையில் பெருகி வரும் கொரோனா வைரஸ் நோயினால், சென்னையில் இருந்து ஊருக்கு யார் வந்தாலும் உள்ளே விடாதீர்கள்” என்று கடலூர் அருகே உள்ள கிராமப்பகுதியில் நிர்வாக ஊழியர் ஒருவர் தண்டோரா அடித்துக் கூறவைக்கப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது. இந்த கிராமம் மட்டுமல்லாது, ஏறக்குறைய நிறைய தமிழக கிராமங்களில் இந்த நடைமுறை அமலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
