'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (20-06-2020) 2396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2332 பேர் தமிழகத்தை சேர்த்தவர்கள் என்றும், மீதி உள்ள 64 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டவர்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இன்று பாதிப்படைந்த 2396இல் 1499 பேர் ஆண்கள் மற்றும் 897 பேர் பெண்கள் ஆகும். தமிழகத்தில் இன்று 1045 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 38 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 24 ஆகவும், தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.
இதுவரை தமிழகத்தில் சுமார் 56,845 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இவர்களில் 24,822 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 31,316 பேர் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மொத்தமாக இதுவரை 704 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதோடு சேர்த்து சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 38,365 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 8,03,824 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
