'தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?'... 'கொரோனா எப்போது குறையும்'... முதல்வர் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த அவர் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது பேசிய முதல்வர், ''தமிழகத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களாலேயே, மீண்டும் கொரோனா பரவியது.
இந்தியாவிலேயே அதிகமாகத் தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு எவ்வளவு தீவிர முயற்சிகள் எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியம். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்'' எனக் கூறினார்.
கொரோனா எப்போது ஒழியும் என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், ''அது கடவுளுக்குத் தான் தெரியும் எனக் கூறினார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

மற்ற செய்திகள்
