ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போக வந்த ‘ஆம்புலன்ஸ்’.. கொரோனா ‘நோயாளி’ செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளி ஒருவர் முகாமில் இருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் ஒடிஷாவில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனை அடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அப்போது முகாமில் தனது பொருட்கள் சில இருப்பதாக கூறி அந்த நபர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். முகாமின் சுவரில் ஏற முயன்று நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தெரிவித்த பொன்கைகான் மாவட்ட துணை ஆணையர், ‘கொரோனா நோயாளி தப்பிக்க முயன்றபோது உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றிருந்தால் சில நாட்களில் குணமடைந்து நலமுடன் வீட்டுக்கு சென்றிருப்பார். ஆனால் அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை’ என தெரிவித்தார். கொரோனா சிகிச்சைக்கு செல்ல பயந்து, முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற ஒருவர் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
