'ரொம்ப மன உளைச்சலா இருக்குங்க...' எவ்ளோ ஆசையோட வந்தேன் தெரியுமா...? ஓட்டு போட வந்தவருக்கு 'இப்படியா' நடக்கணும்...! - மனசு உடைஞ்சு போய்ட்டார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாவட்டம், உறையூர் செட்டித்தெருவில் வசிப்பவர் குறத்தெருவில் வசிக்கும் ஹரிஹரன் என்ற இளைஞர் தன்னுடைய ஜனநாயக கடமையான வாக்கு பதிவு செலுத்த வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.

அங்கே உள்ளே சென்று பார்க்கும் போது ஹரிஹரன் என்பவரின் வாக்கு இதற்கு முன்பே பதிவாகி உள்ளதாகவும், அதனால் நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் அங்கிருந்த அங்கிருந்த அதிகாரிகளின் கேட்டுள்ளார். தான் இப்போது வீட்டில் இருந்து வருவதாகவும் என்னுடைய வாக்கு எப்படி ஏற்கனவே பதிவாகி இருக்கிறது, எப்படி சாத்தியம் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையின் படி, வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றாலும், ஹரிஹரன் விஷயத்தில் பெயர் இருந்தும் வாக்களிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு தான் ஆளாகியிருப்பதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
