TN BUDGET 2022: உயர் கல்வி மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000.. ஆனா இவங்களுக்கு மட்டும் தான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று காலை துவங்கி நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 'அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவிகளுக்கு மாதாமாதம் நிதி உதவி அளிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
ரஷ்யா போட்ட குண்டு..இருந்த சுவடே தெரியாமல் போன தியேட்டர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழக பட்ஜெட் 2022
2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். திமுகவின் முதல் முழு ஆண்டுக்கான பட்ஜெட் இது என்பதால் இது குறித்து பல எதிர்பார்ப்புகள் ஏற்கனவே இருந்து வந்தன.
அரசு பள்ளி மாணவிகளுக்கு
முன்னதாக சட்டசபையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கப்படும்" என அறிவித்தார்.
இது குறித்து பேசும்போது,"பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என்றார்.
மாதம் 1000 ரூபாய்
இதுகுறித்து பேசுகையில்,"அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படித்து பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகிய உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக்கணக்கில் ருபாய் 1000 செலுத்தப்படும்" என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசு அறிவித்த பிற திட்டங்களில் பயன்பெற்றுவரும் மாணவிகளுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இதற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பள்ளி கல்வித்துறை
பட்ஜெட் மீதான உரையில் பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதி குறித்து பேசிய அமைச்சர்,“ கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் மாணவர்களிடையே ஏற்பட்ட கல்வி இடை நிற்றலை போக்க 'இல்லம் தேடி கல்வி' என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 38 மாவட்டங்களில் 1.8 தன்னார்வலர்கள் கல்விப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டிலும் இது தொடரும். இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.