AYALI : “மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை” - அயலி இயக்குநரை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி அளித்த பரிசு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Feb 14, 2023 02:22 PM

சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் வளரிளம்பெண்கள் மீதான சடங்குகள், கலாச்சார ரீதியான அழுத்தத்தை அழுத்தமாக பேசும் வெப்சிரீஸாக Zee5 தளத்தில் வெளியான `அயலி' கவனிக்க வைத்துள்ளது.

TN Minister Udhayanidhi Stalin Praises ZEE5 Ayali series

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "போதும்டி.. இதுக்குமேல என்னால முடியலடி.!!".. மகாலஷ்மிக்கு ரவீந்தரின் வைரல் லவ் லெட்டர்..!❤️

இப்படத்தில் அபி நக்‌ஷத்ரா (தமிழ்ச்செல்வி), அனு மோள் (தமிழ்ச்செல்வியின் அம்மா குருவம்மாள்) , அருவி மதன் குமார் (தமிழ்ச்செல்வியின் அப்பா), முனைவர் காயத்ரி (ஈஸ்வரி) மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். ரேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.  தவிர முக்கிய கதாபாத்திரங்களில், சிங்கம்புலி, லிங்கா, டி.எஸ்.ஆர். தர்மராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். நட்புக்காக லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில் வேல், பகவதி பெருமாள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

TN Minister Udhayanidhi Stalin Praises ZEE5 Ayali series

Images are subject to © copyright to their respective owners.

கதைப்படி, 90களின் முற்பகுதியில் கிராமம் ஒன்றில் பெண்ணடிமைத் தனத்தின் ஒரு பகுதியாக வயது வந்த பெண்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்ளவும், ஊரை விட்டு வெளியூர் செல்ல தடையும், பிற்போக்கான கட்டுப்பாடுகளும் ஊராரால் கட்டமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அத்துடன் இறுதியாக கட்டாயத்திருமணம் பண்ணிக்கொள்ள பணிக்கப்படும் கலாச்சாரம்  நிலவுகிறது.

TN Minister Udhayanidhi Stalin Praises ZEE5 Ayali series

Images are subject to © copyright to their respective owners.

இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி மாணவியாக வரும் நாயகி தமிழ்ச்செல்வி டாக்டராக கனவு காண்கிறாள். ஆனால் அந்த கனவுக்கு தடையாக இருக்கும் தான் வயதுக்குவந்த தகவலை ஊராரிடம் இருந்து மறைத்து வாழ முற்படுகிறாள். இதனால் உண்டாகும் விளைவு, ஊரார் மாறினரா? தமிழ்ச்செல்வியின் செயல் எவ்விதம் முடிகிறது என்பதெல்லாம் நகைச்சுவை கலந்த டிராமாவாகவும்,  சமூக நோக்கிலும் 8 எபிசோடுகளில் அயலி சீரிஸில் பேசப்படுகிறது.

TN Minister Udhayanidhi Stalin Praises ZEE5 Ayali series

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இப்படம் குறித்து தமது ட்விட்டரில், அமைச்சரும் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “அயலி - ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை.

TN Minister Udhayanidhi Stalin Praises ZEE5 Ayali series

Images are subject to © copyright to their respective owners.

குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்.” என குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.! இவ்ளோ பேர் உதவியிருக்காங்களா? நன்றி சொன்ன நடிகர் பொன்னம்பலம்.!

Tags : #UDHAYANIDHI STALIN #AYALI #ZEE5

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Minister Udhayanidhi Stalin Praises ZEE5 Ayali series | Tamil Nadu News.