திடீர்னு ஓய்வை அறிவித்த பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் இயான் மார்கன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அயர்லாந்தில் பிறந்த மார்கன் அந்நாட்டு அணிக்காக முதலில் விளையாடினார். அதன்பிறகு இங்கிலாந்துக்கு குடியேறிய அவர் இங்கிலாந்து அணியில் இணைந்தார். இவருடைய தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் மார்கன். இருப்பினும் தொடர்ந்து பல நாடுகளில் நடைபெற்ற லீக் போட்டிகளில் மார்கன் பங்கேற்று வந்தார்.
2006 இல் தொடங்கி மோர்கன் முதல் தர கிரிக்கெட்டில் 5,042 ரன்களையும், லிஸ்ட் A இல் 11,654 ரன்களையும், T20 களில் 7,780 ரன்களையும் குவித்துள்ளார். இங்கிலாந்தின் ஒயிட்-பால் ஜாம்பவான்களில் ஒருவரான மோர்கன், 225 ODIகளில் 6957 ரன்களை எடுத்தவர். இதில் 13 சதங்கள் அடங்கும். மேலும், ODIகளில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் மார்கன் கருதப்படுகிறார். , 126 போட்டிகளில் 76 வெற்றிகளை கேப்டனாக இங்கிலாந்து அணிக்கு தேடிக்கொடுத்துள்ளார் மார்கன்.
Images are subject to © copyright to their respective owners.
டி20 ஐப் பொறுத்தவரை, மார்கன் 115 போட்டிகளில் 14 அரைசதங்களுடன் 136.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 2458 ரன்களை குவித்துள்ளார். 2010 இல் மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்தின் முதல் ICC ஆடவர் T20 உலகக் கோப்பை வெற்றியின் அங்கமாகவும் மார்கன் திகழ்ந்தார். ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக மார்கன் விளையாடியுள்ளார். அதேபோல சமீபத்தில் நிறைவடைந்த SAT20 தொடரிலும் Paarl Royals அணிக்காக மார்கன் விளையாடியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மார்கன் தனது அன்புக்கு உரியவர்களுடன் நேரம் செலவிட இருப்பதாகவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் வர்ணனையாளராக கிரிக்கெட் பயணத்தை தொடர இருப்பதாகவும் மார்கன் அறிவித்துள்ளார்.
🏆 ODI World Cup winner
🏆 T20 World Cup winner
🎖️ CBE for services to Cricket
Our greatest EVER white-ball captain! 🐐#ThankYouMorgs 👏 pic.twitter.com/RwiJ40DiQS
— England Cricket (@englandcricket) February 13, 2023
Also Read | ரூ. 247 கோடியை நன்கொடையா கொடுத்துட்டு பெயரை கூட சொல்லாம போன மர்ம மனிதர்.. திகைச்சுப்போன அதிகாரிகள்..!