"அம்மாவுக்கு தான் சந்தோஷம்..".. உதயநிதியை வாழ்த்தி இளையராஜா VIRAL குரல் பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இசைஞானி இளையராஜா வாழ்த்து கூறியுள்ளார்.

Also Read | "இது 'ஆ' தான்.."... டீச்சரிடம் மழலை மொழியில் வாதம் செய்த கியூட் சிறுவன் .. இணையத்தை கலக்கும் வீடியோ..!
முதல் அமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரவி உதயநிதிக்கு நேற்று காலை 9:30 மணிக்கு பதவிப் பிரமாணம் & ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
அமைச்சரான உதயநிதிக்கு பல சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை நேற்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா, தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி ஒரு குரல் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் இளையராஜா.. மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே. பதவியேற்ற உங்களை வாழ்த்துவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்று வள்ளுவர் சொன்னது போல் உங்கள் அம்மாவுக்கு தான் பதவியேற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உங்கள் அம்மாவுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். நானும் மகிழ்கிறேன். இந்த அமைச்சர் பதவியை நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்து, இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதை கண்டிப்பாக அடைவீர்கள் என நான் நம்புகிறேன்" என இசைஞானி இளையராஜா பேசி பதிவிட்டுள்ளார்.
Also Read | கர்ப்பமா இருந்தது தெரியாமலேயே விமான பயணம்.. நடுவானில் வந்த பிரசவ வலி.. பதறிப்போன பணியாளர்கள்..!

மற்ற செய்திகள்
