வாழ்த்துக்கள்! 'கேப்டன்' கூல்... ‘தல’ தோனிக்கு பாராட்டு தெரிவித்த... 'தமிழக' அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 24, 2019 01:24 PM

கிரிக்கெட் உலகில் 15 வருடங்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

tn minister sp velumani congrats captain cool thala ms dhoni

இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலக கிரிக்கெட்டிலும் தனி முத்திரை பதித்தவர் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம்.எஸ். தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து, 15 ஆண்டுகளை வெற்றிகரமாக தோனி கடந்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள், இதனை கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் உலகில் எந்த சூழ்நிலையிலும், பொறுமையை கையாளும் தோனி கேப்டன் கூல் என்று அழக்கப்பட்டு வருகிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக உள்ள தோனியை, இங்குள்ள ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே ‘தல’ என்றே கூப்பிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது ட்விட்டர் பக்கத்தில், தோனிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில், உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் வென்ற உலகின் ஒரே கேப்டன் தோனி தான். 'தலா' என்று எப்போதும் அன்பாக அழைக்கப்படும், தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 15 ஆண்டு கால பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளார். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய கேப்டன் கூல் தோனிக்கு பாராட்டுக்கள்’ என்று வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Tags : #MSDHONI #VELUMANI