ஏலத்துக்கு 'என்ன' பிளான் ?... ரசிகரின் கேள்விக்கு... சென்னை அணியின் 'பதில்' இதுதான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 16, 2019 08:56 PM
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 332 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 8 அணிகளும் எந்த பிளேயரை எடுக்க ஆர்வம் காட்டும்? யாரை காத்திருக்க வைக்கும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளால் இந்த ஏலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

— Chennai Super Kings (@ChennaiIPL) December 15, 2019
இந்தநிலையில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சென்னை அணியிடம் நம்முடைய ஆக்ஷன் பிளான் என்ன? என்று கேட்டிருந்தார். இதற்கு சென்னை அணி என்ன பதிலளிக்கும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் சென்னை அணி வழக்கம்போல வடிவேலு பாணியில் பதிலளித்து தப்பித்து விட்டது. ரசிகரின் கேள்விக்கு சென்னை அணி,'' சத்யராஜ், வடிவேலுவிடம் புஜுக்கு புஜுக்கு'' என்று கூறும் GIF வீடியோவை பகிர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டது.
சென்னை அணி கைவசம் தற்போது 14.6 கோடி பணம் இருக்கிறது. இதை வைத்து ஏலத்தில் 2 வெளிநாட்டு வீரர்களையும், 3 உள்நாட்டு வீரர்களையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
