சிஎஸ்கே ஆர்மியில்... இணைந்த இந்திய வீரர்... இவ்வளவு தொகையா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 19, 2019 06:30 PM

இந்தியாவில் நடைப்பெற்று வரும் உள்ளூர் போட்டியான ஐபிஎல் இதுவரை 12 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், 13-வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைப்பெற்று வருகிறது.

ipl 2020 auction csk bought Piyush Chawla for whopping

மிகவும் பரபரப்பாக நடைப்பெற்று வரும் இந்த ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தான் பொறுமையாக அதே நேரத்தில், வீரர்களை எடுப்பதில் போட்டியுடன் காணப்படுகின்றன. முதலில் இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டரான சாம் கரனை 5.50 கோடி ரூபாய்க்கு போட்டி போட்டு அணியில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தபடியாக நாதன் கவுடர் நைல்லிற்கு கடுமையாக போராடியது. இதற்கு சளைக்காமல்  மும்பை இந்தியன்ஸ் அணியும் கடுமையாக போராடி, அவரை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இந்நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ப்யூஸ் சாவ்லாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இது ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1 கோடி ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. பியூஸ் சாவ்லாவை ஏலத்தில் எடுத்ததற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வெறும் 2.35 கோடி ரூபாயே எஞ்சியுள்ளது.

Tags : #IPL #MSDHONI #CSK #PIYUSHCHAWLA