‘போலி கடிதத்துக்கு’ ரஜினிகாந்த் விளக்கமளித்த நிலையில்.. விடிஞ்சு எழுந்த சென்னை வாசிகளுக்கு காத்திருந்த அடுத்த ‘பரபரப்பு’.. ‘வைரல்’ ஆகும் ரஜினி போஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டதாக நேற்று முன்தினம் பரவத் தொடங்கிய கடிதம் ஒன்று வைரலானது.
அந்த போலி கடிதத்தில், கொரோனா காலத்தில் தம் உடல் நிலையையும் மக்களின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு கட்சி தொடங்கும் பணிகளை தள்ளிவைக்கச் சொல்லி மருத்துவர்கள் தமக்கு அறிவுறுத்தியதாக ரஜினி கூறியது போல் குறிப்பிடப்பட்டிருந்தது.
பரபரப்பான இந்த போலி அறிக்கையைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இந்த அறிக்கைக்கு விளக்கம் அளித்த ரஜினி, “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என நேற்று ட்வீட் பதிவிட்டார்.
இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் ஒரு கவனிக்கத்தக்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. யார் அச்சடித்து ஓட்டினார்கள் என குறிப்பிடப்படாத அந்த போஸ்டரில், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”.. “நீங்க வாங்க ரஜினி.. எங்கள் ஆதரவு உங்களுக்குதான்!.. ஓட்டு போட்டா உங்களுக்குதான்” என்றும், போஸ்டருக்கு கீழ், மாற்றத்தை விரும்பும் மக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.