'தமிழகத்தில் இந்த இடங்களில் எல்லாம்’... ‘புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை’... ‘வெளியான அதிரடி அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1 ஆகிய தினங்களில் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது. இதனால் கடற்கரைகளில் மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் (Restaurent, hotels, clubs, resorts (including beach resorts) and other similar places) உணவகம் மட்டும் வழக்கம் போல் செயல்படும். இங்கும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில வெளிநாடுகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தால் மக்கள் அதிகளவில் கூடினால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் அரசு இத்தகைய முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
