‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெற்கு வங்கக் கடலில் நவம்பர் 29-ல் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தென் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது வீசிய பலத்த காற்றால், புதுச்சேரி மற்றும் வட தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில், வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து, தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்துதான் தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா, ஒடிசாவில் அதிக மழை பெய்யுமா என்பது தெரியும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
