இவங்களாலாம் எப்படி மறக்க முடியும்...! எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்க...? - ஊரடங்கில் துயரப்பட்டவர்களின் தற்போதைய நிலை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தப்போது அனைத்து மாநிலங்களில் உள்ள வேற்று மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. சிலர் உலகை விட்டு செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
சொந்த மாநிலம் நோக்கி நடைபயணமாக சென்றவர்களின் சில புகைப்படங்கள் மிகவும் வைரலாகியது. அதில் மூவரைக் குறித்து இந்த செய்திக்குறிப்பு விவரிக்கிறது.
உடம்புக்கு முடியாமல் நோய் வாய்ப்பட்ட தன் தந்தையை, 7 நாட்கள் சுமார் 1200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே ஓட்டி சொந்த ஊருக்கு சென்றவர் 17 வயதான ஜோதி லட்சுமி. பீகார் மாநிலம் சிர்ஹுலி கிராமத்தை சேர்ந்த இவர் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டார். மேலும் இந்திய சைக்கிள் ஃபெட்ரெஷன் தானாகவே முன்வந்து சைக்கிள் ஓட்டும் பயிற்சி தருவதாகவும் கூறியிருந்தது.
இதுகுறித்து கூறிய ஜோதி, 'எனக்கு நிறைய உதவிகள் கிடைத்தன. சிலர் என் படிப்பு செலவினை ஏற்பதாகவும் உறுதியாளித்துள்ளனர். முன்னதாக கிடைத்த பணத்தில் எங்களின் கடனை அடைத்து இப்போது சிறிய வீடாக இருந்தாலும் நிம்மதியாக வாழ்கிறோம்' எனக்கூறியுள்ளார்.
இன்னொருவர் டெல்லியில் இருந்து பிஹாருக்கு சென்ற நடந்து சென்ற ராம்புக்கர் பண்டிட். இவர் நிசாமுதின் பாலம் மேல் போன் பேசிக்கொண்டு அழும் போட்டோ இந்தியாவையே கலக்கத்தில் ஆழ்த்தியது எனலாம்.
ராம்புக்கர் பண்டிட்டித்திற்கு சமூக செயற்பாட்டாளர் ஒருவர் ரயில் டிக்கெட் பதிவு செய்து கொண்டுத்து ஊருக்கு அனுப்பியுள்ளார். கொரோனா காலத்தில் அவரின் ஒரு வயது கொண்ட மகன் உயிரிழந்ததாக குறிப்பிடுள்ளார். தற்போது தன் மூன்று பெண் குழந்தைகளோடு ஊரிலேயே தொழில் செய்து வசித்து வருகிறார்.
முஹம்மது செய்யுப் என்ற 22 வயது இளைஞர் தன் நண்பனை தேற்றும் போட்டோ இணையத்தில் வைரலாகி யாராலும் மறக்க முடியாத ஒரு வடுவாக மாறியது எனலாம். சூரத்தில் இருந்து தன் நண்பன் அம்ரிட் குமாரோடு உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தேவரி கிராமத்திற்கு நடைபயணமாக சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தீடீரென மயக்கமடைந்த அம்ரித்தை முஹம்மது தேற்றிக் கொண்டிருந்தார். தன் தங்கை திருமணத்திற்கு போக நினைத்த அம்ரிட் கடைசி வரை போகமுடியாமல் போனது. மேலும் நல்ல மனம் படைத்த சிலர் கொடுத்த உதவித்தொகை சேகரிக்கப்பட்டு சுமார் 6.5 லட்சம் அம்ரிட் குமார் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.