அடுத்த 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதா என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அதேபோல் சென்னையின் நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் நிறைந்தது. அதனால் கோடைகாலத்தில் சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்து இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 87.8 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கும், குறைந்தபட்சம் 71.6 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கும் வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
