“தம்பிங்களா.. இங்க வாங்க!”.. டாட்டா காட்டிய சாலையோர சிறுவர்களை அழைத்து ‘முதல்வர் பழனிசாமி’ கொடுத்த ‘சர்ப்ரைஸ்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாலையோரம் நின்றிருந்த சிறுவர்கள் அருகே சென்று காரை நிறுத்தி அவர்களுக்கு இனிப்பு வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலையோரம் இருக்கிற சிறுவர்களை பார்க்கிறார். சிறுவர்கள் முதல்வரைப் பார்த்ததும் உற்சாகத்தில் கை அசைத்து வரவேற்கின்றனர்.
சிறுவர்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து நிற்கின்றனர். இதை பார்த்த முதலமைச்சர் பழனிசாமி தனது காரில் சாலையோரம் நிறுத்த சொல்லி அந்த தமது அருகே அழைக்கிறார். அருகில் வந்த சிறுவர்களுக்கு காரில் இருந்தபடியே சாக்லேட்டுகளை முதலமைச்சர் வழங்கியதோடு அந்த சிறுவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.
இதனை வீடியோவாகவும் அங்கிருந்தவர்கள் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Tags : #EDAPPADIKPALANISWAMI #CHIEFMINISTER
