"லுங்கி போட்டதுனால படம் பாக்க விடலையா?".. பிரபல திரை அரங்கில் நடந்தது என்ன?.. தந்தை - மகன் ஆவேச பேட்டி!!.. EXCLUSIVE!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமீபத்தில், தேனியில் உள்ள திரை அரங்கம் ஒன்றில் குடும்பத்துடன் படம் பார்க்க சிலர் சென்ற போது அங்கே நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ, பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திரை அரங்கில் அனுமதி மறுப்பு?
தேனியில் உள்ள திரை அரங்கம் ஒன்றில் சிலர் குடும்பமாக வந்து டாடா திரைப்படத்தை பார்க்க வந்துள்ளனர். அப்போது அந்த குடும்பத்தில் இருந்த ஒருவர் லுங்கி அணிந்தபடி இருக்க, அதன் பெயரில் அவர்களுக்கு திரை அரங்கிற்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பெயரில் திரை அரங்கத்திற்குள் அவர்களை நுழைய விடாமல் இருந்ததால் குடும்பத்தினருக்கும், திரை அரங்க ஊழியர்களுக்கும் இடையே விவாதம் உருவானதாக சொல்லப்படுகிறது.
இறுதியில், டிக்கெட்டுகளை அந்த குடும்பத்தினர் அங்கேயே கிழித்து போட்டு விட்டு கிளம்பியது தொடர்பான வீடியோ பெரிய அளவில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், திரை அரங்கில் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகியோர் Behindwoods சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளனர். அதில் தங்களுக்கு நேர்ந்த விஷயங்கள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
லுங்கி பெயருல எங்களை நிறுத்திட்டாங்க
அப்போது பேசிய மகன், "என் மனைவி கர்ப்பமா இருக்குறதுனால படத்துக்கு போனும்ன்னு ஆசைப்பட்டா. நான் மாலை போட்டுருக்கேன். படத்துக்கு போக வேணாம்ன்னு இருந்தோம். அப்புறம் மனைவி கேட்டதுனால போனோம். தியேட்டர் போறப்போ அப்பா லுங்கி கட்டி இருந்தாரு. அவரு அப்படியே தான் போய் டிக்கெட் எடுத்தாரு. அப்ப எதுவும் சொல்லல, டிக்கெட் குடுத்துட்டாங்க.
அப்புறம் உள்ளே போகும் போது எங்களை நிறுத்திட்டாங்க. மத்த எல்லாரையும் உள்ள விட்டுட்டு இருந்தாங்க. அப்போ அப்பா லுங்கி கட்டுனதுனால உள்ள விடமாட்டோம், அவங்களை வேணா வெளிய அனுப்பிட்டு உங்களை உள்ள விடுறோம்ன்னு சொன்னாங்க. இல்லன்னா Pant ஒன்னு அப்பாவுக்கு வாங்கி குடுங்கன்னு சொல்றாங்க. 59 வயசு ஆகுற என் அப்பா இத்தனை நாளா லுங்கி எல்லாம் தான் போட்டு இருக்காரு. அப்படி இருக்கும் போது படம் பார்குறதுக்காக Costume மாற்ற முடியுமா?. இதே மாதிரி போன வாரமும் இதே தியேட்டர்ல போனோம். யாருமே ஒன்னும் சொல்லல" என தெரிவித்துள்ளனர்.
அதே போல, திரை அரங்கில் தங்களுக்கு நேர்ந்த சம்பவம் அனைவர் முன்னிலையிலும் ஒரு வித அவமானத்தை ஏற்படுத்தியதாகவும், திரை அரங்கம் சார்பில் பணத்தை Refund செய்ய கேட்டும் அதற்கு அவர்கள் தயாரில்லை என்றும் தந்தை, மகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திரை அரங்கம் சார்பில் விளக்கம்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட திரையரங்கத்தின் மேனேஜர்களிடமும் Behindwoods சார்பில் நேரடியாக பேசியிருந்தனர். அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, எங்கள் திரையரங்கில் லுங்கி அணிவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதே வேளையில் குடும்பத்தினருடன் வரும் போது லுங்கி இருந்தால் ஒருமுறை விஷயத்தை தெரிவித்து அவர்களை அனுமதிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் எடுக்காம வந்தாங்களா?
அதேபோல வைரலாகி வரும் வீடியோவுக்கு முன்னும் பின்னும் உள்ள விஷயங்கள் வெளியே வரவில்லை என்றும், அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு டிக்கெட்டுகள் எடுக்காமல் போனதால்தான் பிரச்சனை ஆரம்பமானது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு ஏன் டிக்கெட் எடுக்கவில்லை என தாங்கள் கேட்டதின் பெயரில் தான் அவர்கள் லுங்கி அணியாமல் அணிந்து உள்ளே போக அனுமதி மறுக்கப்பட்டது என மாற்றி ஆரம்பத்தில் இருந்து தகாத வார்த்தைகளையும் பேசி வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும் திரையரங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களே முழுமையாக வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும் கடைசி வரைக்கும் Refund செய்து கொள்ள அறிவுறுத்தியும், டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதே போல இந்த சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் வெவ்வேறு கருத்துக்கள் இருப்பது பற்றியும் பலரும் பரவலாக பேசி வருகின்றனர்.